லண்டன்: ஐரோப்பாவில் வெற்றி தினத்தின் 80 ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம் லண்டனில் கோலாகலமாக தொடங்கியது. 2 ஆம் உலக போரின் இறுதியில் இட்லரின் நாஜிப்படைகள் பிரிட்டன் உள்ளிட்ட நேச படைகளுடன் சரணடைந்ததை கொண்டாடும் ஐரோப்பாவின் வெற்றி தின கொண்டாட்டம் லண்டன் வீதிகளில் கோலாகலமாக தொடங்கியது. அதன் அடையாளமாக லண்டனின் பிக் பென் கடிகாரம் ஒலி எழுப்பியது.
தொடர்ந்து வெற்றி விழாவின் தொடக்கமாக 1945 மே 8ஆம் தேதி ஜெர்மன் படைகள் தோல்வி அடைந்தது ஏற்று அப்போதைய பிரிட்டன் பிரதமர் கிங்ஸ்டன் சேர்ச்சில் ஆற்றிய உரையின் தொடக்க பகுதியில் தி லாஸ்ட் ஸ்பீச் திரைப்படத்தின் சர்ச்சிள் கதாபாத்திரத்தில் நடித்த டிமோத்தி ஸ்பால் வாசித்தார். இதை அடுத்து ஆலன் கெனட் என்ற 101 வயது முன்னாள் ராணுவ வீரரிடம் அமைதிகான சுடரை காமன்வெல்த் வால் கிரேஸ் குழு வழங்க அனைவரும் எதிர்பார்த்த ராணுவ அணிவகுப்பு வைட் ஹால் சதுக்கத்தில் இருந்து தொடங்கியது.
அணி வகுப்பில் உக்ரைன் நாட்டு வீரர்களும் பங்கேற்றனர். ட்ரபுள் கார் சதுக்கத்தின் வழியாக பக்கிங்கம் அரண்மனையை அடைந்த ராணுவ அணிவகுப்பை அரச குடும்பத்தினர் பார்வையிட்டனர். ராணுவ அணிவகுப்புக்கு அரசர் சார்லஸ் எழுந்து நின்று சல்யூட் அடித்தார். இதை அடுத்த வெற்றி விழா கொண்டாட்டத்தின் சிகர நிகழ்வான ரெட் அரேஜ் எனப்படும் விமானப்படை விமானங்களின் சாகசம் அரங்கேறியது. தேசிய கீதம் ஒலித்ததும் முன்னாள் மற்றும் தற்போதைய விமான படைகளில் உள்ள 23 விமானங்கள் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். பக்கிங்காம் அரண்மனை மீது பறந்தபோது நீலம், சிவப்பு, வெள்ளை நிறத்தை வெளியிட்டபடி பிறந்ததை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர்.
The post லண்டனில் “ஐரோப்பாவில் வெற்றி” தினக் கொண்டாட்டம் கோலாகலம்: பிக் பென் கடிகாரம் ஒலியெழுப்பியதும் தொடங்கப்பட்ட ராணுவ அணிவகுப்பு appeared first on Dinakaran.