புதுடெல்லி: அரியானாவில் அரசு துறை ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணையில் ரூ.35 லட்சம் லஞ்சம் கேட்டு, அதில் முன்பணமாக ரூ.3.50 லட்சம் பெற்றது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மற்றும் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நீனா கூறுகையில்,’ ஈடி, சிபிஐ மற்றும் பிற அரசுத் துறைகளில் உள்ள ஊழல் நாட்டில் உள்ள விசாரணை அமைப்புகள் முழுவதையும் உலுக்கியுள்ளது.
மூன்று அரசு அதிகாரிகளை சிபிஐக்குக் காவலில் வைக்கும் போது, சிபிஐ, இடி மற்றும் பிற அரசுத் துறைகளின் அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதற்காக சதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு, விசாரணை அமைப்பின் மீது நடத்த வேண்டிய விசாரணையின் அவசியத்தை காட்டுகிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் பிற துறைகளில் தலைவிரித்தாடும் ஊழல் வழக்குகளில் இதுவும் ஒன்றாகும், இது நமது நிர்வாக மற்றும் புலனாய்வு இயந்திரத்தின் முழு அஸ்திவாரத்தையும் அதிர வைக்கிறது. இது பல்வேறு துறைகளின் அதிகாரிகளின் கூட்டுச் சதியை பிரதிபலிக்கிறது’என்றார்.
The post லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் ஆட்டம் காணும் ஈடி, சிபிஐ: டெல்லி உயர் நீதிமன்றம் ஆவேசம் appeared first on Dinakaran.