திருச்சி,ஏப்.29: மே தினத்தினை முன்னிட்டு மே.1 ம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். மே தினத்தினை முன்னிட்டு மே.1 ம் தேதி (வியாழக்கிழமை) உலர்நாளாக தெரிவிக்கப்பட்டு உள்ளதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டிருக்கும். அதனுடன் இணைந்து இயங்கும் மதுக் கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
The post மே தினத்தை முன்னிட்டு மது கூடங்களுக்கு மே 1 விடுமுறை appeared first on Dinakaran.