லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? - அன்புமணி

3 months ago 19

சென்னை: ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஊட்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி சலுகைகளை வழங்கியதற்காக நான்கு தரப்பினரிடமிருந்து கையூட்டாக பெறப்பட்ட ரூ.11.70 லட்சம் பணத்துடன் கையூட்டு தடுப்புப் பிரிவினரால் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு பதிலாக அவரை திருநெல்வேலி மாநகராட்சியின் உதவி ஆணையராக நியமித்து தமிழக அரசு ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு பதிலாக வெகுமதி வழங்குவது கண்டிக்கத்தக்கது.

Read Entire Article