லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை: செல்போன் சிக்னல், சிசிடிவியை வைத்து துப்பு துலங்கிய போலீஸ்

2 months ago 17

உத்தரபிரதேசம்: லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டம் சின்ஹட் பகுதியை சேர்ந்தவர் கஜனன். ஐபோன் வாங்க வேண்டும் என்பது இவரது நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. ஆன்லைனில் பண்டிகைக்கால சலுகை விலையில் எலட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்பட்டு வரும் நிலையில் ஆன்லைன் மூலம் 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 போன்களை கேஷ் ஆன் டெலிவரி செய்துள்ளார்.

அதில் ஒன்று ஐபோன் இந்த 2 போன்களை டெலிவரி ஊழியரான 30 வயதுடைய பரத் சாகு என்பவர் கடந்த 23ஆம் தேதி எடுத்து சென்றுள்ளார். பின்னர், ஐபோனை வடிக்கையாளரான கஜனனிடம் கொடுத்துள்ளார். மேலும் ஐபோனுக்கான பணம் 1.50 லட்சம் லட்சத்தை தருமாறு வாடிக்கையாளர் கஜனனிடம் டெலிவரி ஊழியர் பரத் சாஹு கேட்டுள்ளார். அப்போது டெலிவரி ஊழியரை கஜனனும் அவரது நண்பரான 21 வயதுடைய ஆகாஷ் ஷர்மாவும் சேர்ந்து தங்கள் வாடகை கடைக்குள் அழைத்து சென்றனர். டெலிவரி ஊழியரான பரத்தை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.

பின்னர், அந்த ஐபோனை திருடிய கஜனனும், அவரது நண்பரும் கொலை செய்யப்பட்ட பரத் சாகுவின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி ஊருக்கு அருகே உள்ள இந்திரா கால்வாயில் வீசியுள்ளனர். வேளைக்கு சென்ற பரத் 2 நாட்களாகியும் வராதது குறித்து அவரது குடும்பத்தினர் சின்ஹட் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பரத்தை தேடி வந்தனர். ஆன்லைன் டெலிவரிக்காக பரத்துக்கு வந்த செல்போன் எண்களையும் டெலிவரிக்காக அவர் சென்ற இடங்களுக்கும் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கடைசியாக டெலிவரிகாக சென்ற இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பரத் கடைசியாக கஜனனிடம் பேசியது தெரியவந்தது. இதை அடுத்து அவரை தேடிய நிலையில் அவரது நண்பரான ஆகாஷ் பிடிபட்டார். அப்போது அகாஷிடம் நடத்திய விசாரணையில் ஐபோன்காக டெலிவரி ஊழியர் பரத்தை தானும் நண்பர் கஜனனும் சேர்ந்து கொலை செய்து கால்வாயில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் கால்வாயில் வீசப்பட்ட பரத்தின் உடலை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள முதன்மை குற்றவாளி கஜனனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். iPhone-மோகத்தில் டெலிவரி ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post லக்னோவில் ஐபோனுக்காக டெலிவரி ஊழியர் கொலை: செல்போன் சிக்னல், சிசிடிவியை வைத்து துப்பு துலங்கிய போலீஸ் appeared first on Dinakaran.

Read Entire Article