
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். வெற்றிகரமாக 17 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதன் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில், கடந்த தொடரில் சென்னை அணிக்கு விளையாடிய ஷர்துல் தாக்கூர் இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
காயம் காரணமாக லக்னோ அணியில் இருந்து விலகிய மோசின் கானுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்ட்டுள்ளார் . ஐபிஎல் ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை எந்த அணியும் ஏலத்தில் வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.