'லக்கி பாஸ்கர்' திரைப்படத்தின் ஓ.டி.டி தேதி அறிவிப்பு

1 hour ago 1

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் மலையாள நடிகராக இருந்தாலும், இவரது திரைப்படங்களுக்கு தென்னிந்திய மொழிகளில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அவரது நடிப்பில் வௌியான "சீதா ராமம்" திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் நடித்த "கிங் ஆப் கோதா" திரைப்படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை.

அதனை தொடர்ந்து தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் "லக்கி பாஸ்கர்" வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதில் துல்கர் சல்மான் உடன் இணைந்து மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இதற்கு இசை அமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

சாதாரண நபரான நாயகன் அரசு மற்றும் வங்கி நிர்வாகத்தை ஏமாற்றி பெரும் செல்வந்தனாக மாறும் கதையாக உருவான இப்படம், தெலுங்கு மற்றும் மலையாளத்தை முதன்மையாகக் குறிவைத்து உருவானாலும் தமிழிலும் கவனிக்கப்பட்டு வருகிறது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ரூ.120 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் 25வது நாளை தாண்டி திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் இப்படம் வெளியாகிறது.

Bringing the magic of #BlockbusterLuckyBaskhar to your home screens! Watch #LuckyBaskhar on @netflix from 28 November in Telugu, Tamil, Malayalam, Kannada and Hindi Languages! #LuckyBaskharOnNetflix @dulQuer #VenkyAtluri @gvprakash @Meenakshiioffl @vamsi84 @NimishRavipic.twitter.com/RrV1L3y0DN

— Sithara Entertainments (@SitharaEnts) November 25, 2024
Read Entire Article