
சென்னை,
கன்னட நட்சத்திரம் ரிஷப் ஷெட்டி அடுத்து ஒரு அற்புதமான படத்தில் கையெழுத்திட்டிருப்பதுபோல் தெரிகிறது.
சமீபத்திய தகவல்களின்படி, ''லகான்'', ''ஸ்வதேஷ்'' மற்றும் ''ஜோதா அக்பர்'' ஆகிய கிளாசிக் படங்களை இயக்கி புகழ்பெற்ற பாலிவுட் திரைப்பட இயக்குனர் அசுதோஷ் கோவரிகருடன் ரிஷப் ஷெட்டி கைகோர்த்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படம் விஜயநகர பேரரசர் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரை அடிப்படையாகக் கொண்டதாக தெரிகிறது. பல தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷப் ஷெட்டி தற்போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் காந்தாரா 2 மற்றும் ஜெய் அனுமான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.