ரோகித் சர்மாவிடமிருந்து இதனை கற்றுக்கொண்டேன் - ரிஷப் பண்ட்

3 hours ago 2

கொல்கத்தா,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் இன்று நியமனம் செய்யப்பட்டார். கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இது தொடர்பான அறிவிப்பை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ரிஷப் பண்டும் கலந்து கொண்டார். லக்னோ அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின்னர் ரிஷப் பண்ட் கூறியதாவது, இந்திய அணியில் நிறைய மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆட்டம் குறித்து நிறைய அனுபவங்களை கொண்டுள்ள அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். அணியில் உள்ள அனைத்து மூத்த வீரர்களிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம்.

கேப்டனிடமிருந்து மட்டும்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. பல கேப்டன்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டுள்ளேன். அவற்றில் மிகவும் குறிப்பிட்டு சொல்வது கடினம். ரோகித் சர்மாவிடமிருந்து வீரர்கள் மீது எப்படி அக்கறை காட்ட வேண்டும் என்பதை கற்றுக்கொண்டேன். அணியின் கேப்டனாக செயல்படும் போது வீரர்கள் மீது அக்கறையாக இருக்க வேண்டும் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன்.

அணியில் உள்ள வீரர்களுக்கு நீங்கள் நம்பிக்கை அளித்தால், அவர்கள் அணிக்காக கற்பனையிலும் நினைக்க முடியாத அளவுக்கு சிறப்பாக செயல்படுவார்கள். அணியில் உள்ள வீரர்களுக்கு கேப்டன் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article