
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தனர். வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு (5 போட்டிகள்) முன்னர் இருவரும் ஓய்வு பெற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்பப்போகும் வீரர்கள் யார்-யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாத சூழலில் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார். சுப்மன் கில்லை கேப்டனாக தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த இந்திய பிளேயிங் லெவன் பின்வருமாறு:-
1. ஜெய்ஸ்வால்
2. கே.எல்.ராகுல்
3. சாய் சுதர்சன் அல்லது படிக்கல்
4. சுப்மன் கில் (கேப்டன்)
5. ரிஷப் பண்ட்
6. நிதிஷ் குமார் ரெட்டி
7. ஜடேஜா
8. ஷர்துல் தாகூர் அல்லது தீபக் சாஹர்
9. ஜஸ்பிரித் பும்ரா
10. சிராஜ்
11. முகமது ஷமி அல்லது பிரசித் கிருஷ்ணா