ரொட்டி தராத ஆத்திரத்தில் 4-வது மாடியில் இருந்து தள்ளி விட்டு தொழிலாளி கொலை

2 months ago 13

புதுடெல்லி,

டெல்லியின் பாவனா பகுதியில், தீபாவளியை முன்னிட்டு தொழிற்சாலையை அலங்கரிக்கும் பணியில் ராம் பிரகாஷ் என்ற தொழிலாளி ஈடுபட்டு கொண்டு இருந்துள்ளார். அப்போது, தொழிற்சாலையின் மற்றொரு பகுதியில் அஸ்லம் என்பவர் சுற்றி திரிந்தபடி இருந்துள்ளார்.

ஆலையின் 4-வது மாடியில் இருந்தபடி பிரகாஷ் அலங்கார பணியை செய்தபோது, அவரிடம் சென்ற அஸ்லம், சாப்பிட 2 ரொட்டிகளை தரும்படி கேட்டுள்ளார். அதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்து உள்ளார். அதனுடன், சொந்த பணத்தில் ரொட்டிகளை வாங்கும்படியும் அஸ்லமிடம் கூறியுள்ளார்.

இதனால், அஸ்லம் ஆத்திரமடைந்து உள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. பிரகாஷை அஸ்லம் கடுமையாக திட்டியிருக்கிறார். அவரை அடித்து, கட்டிடத்தின் முன் பகுதிக்கு இழுத்து வந்திருக்கிறார்.

இதன்பின்னர், பிரகாஷை தள்ளி விட்டிருக்கிறார். இதில், 4-வது மாடியில் இருந்து பிரகாஷ் கீழே விழுந்ததில் பலியானார். இந்த சம்பவம் நடந்ததும், அந்த பகுதியில் இருந்து அஸ்லம் தப்பி சென்றிருக்கிறார். எனினும், பின்பு அவரை போலீசார் கைது செய்தனர். தொழிற்சாலையின் மற்ற தொழிலாளர்கள் அளித்த சாட்சியங்களின் பேரில் அஸ்லம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Read Entire Article