மதுரை, டிச.11: ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.8.25 கோடியில் தடகளத்திற்கு சர்வதேச தர சிந்தடிக் ஓடுதளத்தில் தார் அடுக்கு அமைக்கும் பணி துவங்கியது. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சர்வதேச தரத்தில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்க துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் ரூ.8.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த நிதியின் மூலம் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏற்கனவே இருந்த சிந்தடிக் ஓடுதளம் சேதமடைந்தததால் அதன் மூன்று அடுக்குகளும் அகற்றப்பட்டன. அதில் புதிய சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தடகளத்தை சுற்றிலும் மழை நீர் வெளியேறும் வகையில் வடிகாலுக்கு குழாய்கள் பதிக்கப்பட்டது.
சேதமடைந்த பழைய அடுக்குகள் அகற்றிய இடத்தில் புதிதாக மூன்று அடுக்குகள் அமைக்கப்பட வேண்டும். அந்த வகையில் வெட்மிக்ஸ் எனும் ஒரு அடுக்கு அமைக்கப்பட்டு முடிந்தது. அதற்கு அடுத்த அடுக்காக தற்போது தார் சாலை போடும் பணி நடந்து வருகிறது. இது குறித்து ஒப்பந்த பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘தார் அடுக்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது முடிய ஒரு வார காலம் ஆகும். இப்பணி முடிந்த பிறகு அதன் மேல் ரப்பர் மூலப்பொருள் கொண்டு சிந்தடி டிராக் அமைக்கப்படும்’ என்றார்.
The post ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ரூ.8.25 கோடியில் தடகள சிந்தடிக் ஓடுதளத்தில் தார் அடுக்கு அமைக்கும் பணி appeared first on Dinakaran.