ரேஞ்ச் ரோவர் நிறுவனம், எவோகியூ ஆட்டோபயோகிராபி காரை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இது இரண்டு வித இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். பி250 எனப்படும் பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் அதிகபட்சமாக 246 எச்பி பவரையும் 365 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டி200 எனப்படும் டீசல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின் அதிகபட்சமாக 201 எச்பி பவரையும் 430 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
கருப்பு அல்லது கொரீத்தியன் பிரான்ஸ் ரூப், சிக்னேச்சர் எல்இடியுடன் கூடிய பிக்சல் எல்இடி ஹெட்லைட் , 19 அங்குல அலாய் வீல்கள், 11.4 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.69.5 லட்சம்.
The post ரேஞ்ச் ரோவர் எவோக்யூ ஆட்டோ பயோகிராபி appeared first on Dinakaran.