ரெயில்வே காவல் பிரிவு செய்திமடல்: தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட்டார்

5 hours ago 2

தமிழ்நாடு ரெயில்வே காவல் பிரிவு தேச பாதுகாப்பு, குற்றத்தடுப்பு, சட்டவிரோத கடத்தல், நுண்ணறிவு தகவல் சேகரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் நடைபெறும் குற்றங்கள் எனப் பல வகையான குற்றங்களைத் தடுக்கும் மற்றும் கண்டறியும் பணியை மிகச் செவ்வனே செய்து வருகிறது.

தமிழ்நாடு ரெயில்வே காவல் பிரிவு குறித்த செய்திகளை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக செய்திமடல் ஒன்று வெளியிடப்படுகிறது. இன்று இந்த செய்திமடலை (News Letter) தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வெளியிட அதனை சென்னை தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா பெற்றுக்கொண்டார்.

இந்த செய்தி மடல் வெளியீட்டு நிகழ்சியில் ரெயில்வே காவல் பிரிவில் சிறப்பான முறையில் பணியாற்றி வழிப்பறி மற்றும் திருட்டு குற்றங்களை கண்டுபிடித்தவர்கள், ரெயிலில் கடத்திவரப்பட்ட கஞ்சாவை அதிக அளவில் கண்டுபிடித்தவர்கள் மற்றும் நீண்ட நாட்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தின் குற்றவாளிக்கு எதிரான பிணையில் வர முடியாத பிடியாணையை நிறைவேற்றியது போன்ற பணிகளைப் பாராட்டி தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்சியில் ரெயில்வே டி.ஜி.பி. வன்னிய பெருமாள், ரெயில்வே ஐ.ஜி. பாபு, ரெயில்வே எஸ்.பி. ஈஸ்வரன், ரெயில்வே டி.எஸ்.பி.க்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

Read Entire Article