ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்கள்; மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் - பினராயி விஜயன் வலியுறுத்தல்

1 week ago 4

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் - டெல்லி இடையே இயக்கப்படும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில், கடந்த 2-ந்தேதி டெல்லியில் இருந்து கேரளாவின் பாலக்காடு மாவட்டம் சோரனூர் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது சோரனூர் பாலத்தில் அமைந்துள்ள தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தபோது, சோரனூர் ரெயில்வே பாலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரெயில்வே ஒப்பந்த ஊழியர்கள் மீது ரெயில் மோதியது.

இந்த கோர விபத்தில் ஊழியர்கள் அனைவரும் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த ரெயில்வே ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், ரெயில் விபத்தில் பலியான தூய்மை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். மேலும் ரெயில்வே துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய ரெயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Entire Article