'ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால்...'- பிருத்விராஜ்

14 hours ago 2

சென்னை,

மோகன்லால் நடிப்பில், பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'எல் 2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 27-ம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இயக்குனர் பிருத்விராஜ் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை வைத்து படம் பண்ண லைகா புரொடக்சன்ஸ் ஒருமுறை என்னை அணுகியது. ரஜினிகாந்த் சாரை இயக்குவது என்னைப் போன்ற இளம் இயக்குனர்களுக்கு மிகப்பெரிய கனவு. ஆனால், திட்டமிட்டபடி அதை செயல்படுத்த முடியவில்லை.

புரொடக்சன் ஹவுஸ் மனதில் ஒரு குறிப்பிட்ட கால வரையறை இருந்தது, மேலும் அந்த காலக்கெடுவுக்குள் ரஜினி சார் போன்ற நடிகருக்கு கதை உருவாக்குவது கடினமான ஒன்று' என்றார்.

"ரஜினிகாந்த் சாரை டைரக்ட் பண்ற சான்ஸ் வந்துச்சு"..ரகசியத்தை உடைத்த பிரித்விராஜ் | Rajinikanth#rajinikanth #prithviraj #thanthitv pic.twitter.com/IlWfFvYSBe

— Thanthi TV (@ThanthiTV) January 26, 2025
Read Entire Article