
மதுரை,
மதுரை பசுமலை துணைமின் நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே, தியாகராஜர் காலனி, பசுமலை ஜி.எஸ்.டி. சாலை, ஜோன்ஸ்புரம், விநாயகர் மேற்கு ஒரு பகுதி மட்டும், கிருஷ்ணாபுரம், செமினெரிலைன், ஜோன்ஸ்கார்டன், கம்பர்தெரு, விநாயகநகர், மூட்டா தோட்டம், மூட்டா காலனி, நிலா நகர், கோபால்சாமி நகர், ஜக்காதேவி தெரு, சூரியகாந்தி தெரு ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் லதா தெரிவித்தார்.
சமயநல்லூர் மின் பிரிவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சமயநல்லூர், தேனூர், கட்டபுலி நகர், தோடனேரி, சத்தியமூர்த்தி நகர், வைரவநத்தம், தனிச்சியம், நகரி, டெபேதார்சந்தை, நெடுங்குளம், திருவாலவாயநல்லூர், அதலை, பரவை, பரவை மெயின் ரோடு, மங்கையர்க்கரசி கல்லூரி பகுதிகள், பொதும்பு, பரவை மார்க்கெட், கோவில் பாப்பாக்குடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என சமயநல்லூர் மின் செயற்பொறியாளர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.
மின்தடை
செக்கானூரணி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செக்கானூரணி, ஆ.கொக்குளம், சொரிக்காம்பட்டி, கண்ணனூர், கருமாத்தூர், கே.புளியங்குளம், ஊத்துப்பட்டி, பன்னியன் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுவதாக என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.