ரெயிலில் பட்டாசு எடுத்துச் செல்லக்கூடாது: ரெயில்வே போலீசார்

3 months ago 15

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ரெயில்களில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல ரெயில்வே பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது. இதை மீறுபவர்கள் ரெயில்வே சட்டப்பரிவின் கீழ் கைது செய்து அபராதம் விரிக்கப்படும் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரெயில்வே போலீசார் கூறுகையில், ரெயில் பயணத்தை அதிக மக்கள் பயன்படுத்தி வருவதால் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரெயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களையும் எடுத்து செல்லக்கூடாது. மேலும் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

Read Entire Article