கோவை,
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் குறைகளை கேட்டறியவுள்ளதாக கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த சுற்றுப்பயணமானது பிப்ரவரி 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும், கோவையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்க உள்ளார் என்றும் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.