'ரெட்ரோ' படத்தின் டிரெய்லர் அப்டேட்

1 month ago 9

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ரெட்ரோ படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னையிலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் வருகிற 18-ந் தேதி இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த இசை வெளியீட்டு விழாவிலேயே டிரெய்லர் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article