'ரெட்ரோ' படத்தின் டப்பிங் பணியை நிறைவு செய்த சூர்யா

23 hours ago 1

சென்னை,

நடிகர் சூர்யாவின் 44-வது படமான 'ரெட்ரோ' படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் சுஜித் ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற மே 1-ந் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. முன்னதாக டீசர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

அதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காட்சி காமிக்ஸ் வடிவில் வெளியாகி வருகின்றன.படத்தின் ரிலீஸ் தேதி நெறுங்கி வருவதால் படத்திற்கான பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சூர்யா ரெட்ரோ படத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார். 

#RETRO - Suriya completed the Dubbing .. A Small video from him with the film's dialogue..pic.twitter.com/fJVrUlsuFX

— Laxmi Kanth (@iammoviebuff007) April 2, 2025
Read Entire Article