ரூ20,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது: உதவியாளரும் சிக்கினார்

1 week ago 3


உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர் மலைராஜன்(38). இவர் தனது தாத்தா பெயரில் உள்ள 4 சென்ட் இடத்தை பாக பிரிவினை செய்து, சகோதரர்களான 4 பேருக்கு பத்திர பதிவு செய்ய உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சார்பதிவாளரான ஜியாவுதீனை(47) அணுகியுள்ளார். அவர் பத்திர பதிவிற்கு ரூ.40 ஆயிரம் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வளவு தொகை கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக மலைராஜன் கூறிய நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் ரூ.20 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் பத்திரப்பதிவு செய்ய கைரேகை, கண் விழி, கையொப்பம் பெற்றுக் கொண்ட சூழலில், மலைராஜன் பணம் கொண்டு வரவில்லை என தெரிந்ததும், கணினியில் பழுதாகிவிட்டதாக கூறி நேற்று பணத்துடன் வந்து பத்திரப்பதிவு செய்து கொள்ள கூறியுள்ளனர். இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு மலைராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை மலைராஜனிடம் கொடுத்துள்ளனர். அதனை, நேற்று உசிலம்பட்டி சார் பதிவாளர் ஜியாவுதீன், அவரது உதவியாளர் எடிசன்(38) மூலம் லஞ்சமாக பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

The post ரூ20,000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது: உதவியாளரும் சிக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article