*எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
செய்யாறு : செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் வெம்பாக்கம் கிராமத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற 15வது நிதிக்குழு மானியத்திலிருந்து 27 ஊராட்சிக்கு ஸ்போர்ட்ஸ் கிட் மற்றும் வேளாண்மை துறை சார்பாக 3 பவர் டில்லரை எம்எல்ஏ ஒ.ஜோதி வழங்கினார். தொடர்ந்து. ரூ.34 லட்சத்தில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை எம்எல்ஏ ஒ.ஜோதி திறந்து வைத்தார்.
வெங்களத்தூர் கிராமத்தில் ரூ.12.67 லட்சத்தில் நியாய விலை கட்டிடத்தை எம்எல்ஏ ஒ.ஜோதி திறந்து வைத்தார். அரசங்குப்பம் கிராமத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய கலைஞர் கலையரங்கம், ரூ.5 லட்சத்தில் காசி விஸ்வநாதர் கோயிலில் பேவர் பிளாக் சாலையை மக்களின் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ ஒ.ஜோதி அர்ப்பணித்தார்.
செய்யாறு செய்யனூர் பேட்டை வைத்ததடம் எண் 12 புதிய பேருந்தை வெங்களத்தூர் உமையாள்புரம் அரசங்குப்பம் வழியாக செல்லும் தடம் எண் 12 னை எம்எல்ஏ ஜோதி கொடி அசைத்து நகர பேருந்தை துவக்கி வைத்தார்.
முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் த.ராஜி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, இந்திராணி, இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சண்முகசுந்தரம், தாசில்தார் திருநாவுக்கரசு, ஆய்வாளர் அசோக்,
உதவியாளர் கார்த்திகேயன், போக்குவரத்து துறை தொழில்நுட்ப துணை மேலாளர் துரைராஜ், செய்யாறு பஸ் பணிமனை கிளை மேலாளர் சோலையப்பன், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் ஜெ.சி.கே.சீனிவாசன், வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.தினகரன், தொமுச மண்டல பொருளாளர் மோகனரங்கன்,
மண்டல இணை செயலாளர் சத்யநாராயணன், ஆதிதிராவிடர் நலத்துறை தலைவர் கருணாகரன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத்தலைவர் சிட்டிபாபு, மாவட்ட சுற்றுச்சூழல் தலைவர் புரிசை சிவகுமார், மாவட்ட திமுக பிரமுகர்கள் சிவப்பிரகாசம், பெருமாள், ஞானமுருகன், ஒன்றிய துணை சேகர், கார்த்திகேயன், சங்கர் (எ) முனுசாமி, குஞ்சிதபாதம், புகழேந்தி, ரமேஷ், இன்பராஜா, சேகர், கார்த்தி கலந்து கொண்டனர்.
The post ரூ.85.67 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.