ரூ.7377 கோடி வங்கி கடன் மோசடி சட்டீஸ்கரில் 73 ஹெக்டேர் விவசாய நிலம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

2 weeks ago 3

புதுடெல்லி: சட்டீஸ்கரில் ரூ.7377 கோடி வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் 73 ஹெக்டேர் விவசாய நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். சட்டீஸ்கரில் லஷ்மி காட்சின் லிமிடெட் நிறுவனம் 23 வங்கிகளில் ரூ.7377கோடி கடன் பெற்றுள்ளது. இந்நிலையில் கடன் வழங்கிய வங்கிகளின் கூட்டமைப்பான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா லஷ்மி காட்சின் லிமிடெட் நிறுவனத்தின் மீது சிபிஐயில் மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களை கொடுத்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நிறுவனம், நிறுவனத்தின் தலைமை மேலாண் இயக்குனர், மாதா பிரசாத் அகர்வால், இணை மேலாண் இயக்குனர் பவன் குமார் அகர்வால், துணை மேலாண் இயக்குனர் தேவேஷ் நரைன் குப்தா மற்றும் இயக்குனர் சார்தா அகர்வால் உள்ளிட்டோர் மீது கடந்த 2021ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. ரூ.7377 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தால் கலைக்கப்பட்டது. இந்த வழக்கில் சட்டீஸ்கரின் பாலோடாபஜார் படாபாரா மாவட்டத்தில் நிறுவனம் அல்லது நிறுவனத்தின் நம்பிக்கையான ஊழியர்கள் மற்றும் இதர நபர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்த 73.34 ஹெக்டேர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.

 

The post ரூ.7377 கோடி வங்கி கடன் மோசடி சட்டீஸ்கரில் 73 ஹெக்டேர் விவசாய நிலம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article