ரூ.59 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம் என்ன..?

2 months ago 14

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த 16-ந் தேதி ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னரும், தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே பயணித்து வருகிறது. இதனால் 2 நாள் இடைவெளியிலேயே அதாவது, கடந்த 19-ந் தேதி ஒரு சவரன் ரூ.58 ஆயிரம் என்ற நிலையையும் தாண்டியது.

அதனைத் தொடர்ந்தும் தங்கம் விலை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த 23-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58,720-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக குறைந்து சற்று ஆறுதல் அளித்தது. இந்த நிலையில் நேற்று சற்று உயர்ந்தது.

இந்நிலையில் இன்றைய தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.107-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article