சேலம்: சேலத்தில் ரூ.500 கோடி மோசடி வழக்கில் கைதான ஓட்டுநரின் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பண இரட்டிப்பு மோசடி கும்பலின் தலைவியான விஜயாபானுவுடன், வேன் ஓட்டுநர் சையது முகமது கைது செய்யப்பட்டார். 2012ல் வேலூரில் ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி விஜயாபானு 22 சவரன் நகை மோசடி செய்ததும் அம்பலமானது. சேலத்தில் அன்னை தெரசா என்ற அறக்கட்டளை தொடங்கி இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி மக்களிடம் வசூலித்து மோசடி செய்தனர். அறக்கட்டளை தலைவர் விஜயாபானு, துணைத்தலைவர் ஜெயப்பிரதா, நிர்வாகி பாஸ்கர், ஓட்டுநர் சையது ஆகியோர் கைதாகினர். அறக்கட்டளை நடத்திவந்த திருமண மண்டபத்தில் இருந்து ரூ.12.65 கோடி, 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. சையது வங்கிக் கணக்கில் உள்ள ரூ.84 லட்சத்தை முடக்குவதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.
The post ரூ.500 கோடி மோசடி: கைதானவர் வங்கி கணக்கில் ரூ.84 லட்சம் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.