ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்ட நடிகர் கவுண்டமணி

3 months ago 24

சென்னை,

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் கவுண்டமணி. இவர் கடந்த 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார்.

5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி அளவுள்ள கொண்ட அந்த இடத்தில் சுமார் 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் நிறுவனத்தோடு கவுண்டமணி ஒப்பந்தம் செய்திருந்தார். 15 மாதத்தில் இந்த கட்டட பணிகளை முடித்து ஒப்படைக்குமாறு கவுண்டமணி அந்த நிறுவனத்தினம் ஒப்பந்தம் செய்திருந்தார். இதற்காக ரூ. 3.58 கோடி ஒப்ந்ததாரர் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் இருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 2003-ம் ஆண்டு வரை இந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2003ம் ஆண்ட நடிகர் கவுண்டமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி நடிகர் கவுண்டமணி வசம் அவரது நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஒப்பந்தப்படி வணிக வளாகம் கட்டவில்லை என்பதால் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படைக்க மார்ச் 14-ம் தேதி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது நிலத்தை மீட்க நடிகர் கவுண்டமணி சுப்ரீம்கோர்ட்டு வரை சட்டப்போராட்டம் நடத்திய வந்த நிலையில், இன்று நிலம் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article