
புளோரிடா,
எம்.எல்.சி. எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சியாட்டில் ஆர்காஸ் அணிகள் மோதின.
இந்த போட்டிக்கான டாசில் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 188 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் டு பிளெஸ்சிஸ் 91 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 189 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சியாட்டில் ஆர்காஸ் அணி 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 137 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 51 ரன் வித்தியாசத்தில் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சியாட்டில் ஆர்காஸ் தரப்பில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 35 ரன் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் தரப்பில் ஆடம் மில்னே 5 விக்கெட்டும், நூர் அகமது, அஹேல் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.