ரூ. 457 கோடி மதிப்பீட்டில் காவலர் குடியிருப்புகள்; அடிக்கல் நாட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 hours ago 1

காவல்துறை சார்பில் ரூ. 457 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள காவலர் குடியிருப்புகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தமிழக தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாவட்டம் ஆயிரம் விளக்கு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரூ. 457 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள 1,118 காவலர் குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், கோவை மாட்ட்டம் புறநகர் பகுதி பிளிச்சியில் 211 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கோவை மத்திய சிறைச்சாலை (பகுதி 1) கட்டிடங்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அதேவேளை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆயுள் மற்றும் விபத்துக் காப்பீடு உள்ளிட்ட வங்கி சலுகைகளை கட்டணமின்றி வழங்கிட 7 முன்னோடி வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Read Entire Article