
யூபியா,
7-வது ஜூனியர் (19 வயதுக்கு உட்பட்டோர்) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாசலபிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - நடப்பு சாம்பியன் வங்காளதேசம் அணிகள் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது.
இதில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.