ரூ.4.20 கோடி செம்மர கட்டை பறிமுதல் – 8 பேர் கைது

2 hours ago 1

திருப்பதி: ரூ.4.20 கோடி மதிப்புள்ள சுமார் 6 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யபப்ட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அன்னமையா மாவட்டம் வீரபள்ளி மண்டலம் கோமிடோனி செருவு
அருகே செம்மரக் கட்டை கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். காரில் செம்மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததை பார்த்த அதிரடிப்படை அவர்களை விரட்டிச் சென்று 8 பேரை கைது செய்தது. கைது செய்யப்பட்ட 8 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. 8 பேரும் அளித்த தகவலை வைத்து பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டா தைல மரதோப்பில் 185 செம்மரக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட முக்கிய நபர்களை கைது செய்ய திருப்பதி அதிரடிப்படை போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ரூ.4.20 கோடி செம்மர கட்டை பறிமுதல் – 8 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article