ஈரோடு, ஜன. 30: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30 ஆயிரத்துக்கு நேற்று முன்தினம் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பங்கேற்க வெப்பிலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,739 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.
இதில், ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.47.99க்கும், அதிகபட்ச விலையாக ரூ.49.79க்கும், சராசரி விலையாக ரூ.47.99க்கும் ஏலம் மூலமாக விற்பனையானது. இதில், மொத்தம் 620 கிலோ எடையிலான தேங்காய்கள் விற்பனையாகின. இவற்றின் விற்பனை மதிப்பு ரூ.30 ஆயிரத்து 204 ஆகும் என விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
The post ரூ.30 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் appeared first on Dinakaran.