ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல்

3 weeks ago 6

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நவபாஷாண முருகன் சிலை 10 கிலோ எடை கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.35 லட்சம் மதிப்பிலான ஒரு அடி உயரம் கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு சிலைகளையும் மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சிலையை கடத்தி வந்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#JUSTIN | ரூ.25 கோடி மதிப்புள்ள நவபாஷாண சிலை பறிமுதல்

ரூ.25 கோடி மதிப்பிலான 10 கிலோ எடை
கொண்ட நவபாஷாண முருகன் சிலையும்; ரூ.35 லட்சம் மதிப்புடைய ஒரு அடி உயரம் கொண்ட யானை தந்தத்தினால் செய்யப்பட்ட கிருஷ்ணர் சிலையும் பறிமுதல்

இருவரை கைது செய்து மத்திய வனவிலங்கு குற்றத் தடுப்பு… pic.twitter.com/I1SA8uQywI

— Thanthi TV (@ThanthiTV) December 22, 2024

Read Entire Article