ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெண்களை யூ-டியூபர்ஸ் அவதூறாக பேசுகின்றனர்: குஷ்பு ஆதங்கம்

3 months ago 8

கோவை: தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்திற்காக யூ டியூபர்ஸ் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது உள்ளது என்று குஷ்பு தெரிவித்து உள்ளார்.கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையும், பாஜ பிரமுகருமான குஷ்பு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எல்லா இடத்திலும் பிரச்னைகள் உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் போது அரசியல் விவாதம் ஆக்காதீர்கள். பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வு காண குழு அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முதல்வர் எடுக்க வேண்டும்.

அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் பெண்களை அழைத்து இந்த பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஹேமா கமிட்டி போல் தமிழகத்தில் நடிகர்கள் சங்கம் சார்பில் ரோகிணி மூலம் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. நிறைய யூ டியூபர்ஸ் எங்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்கள். தமிழகத்தில் ரூ.2 ஆயிரத்திற்காக யூ டியூபர்ஸ் பெண்களை பற்றி அவதூறாக பேசுவது உள்ளது. தங்கள் வீட்டில் பெண்கள் இருப்பதை மறந்து கணவன், மனைவி இடையே நடப்பதையும், பெண்கள் பற்றியும் அவதூறாக பேசுகின்றனர்.

குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பது கஷ்டமாக உள்ளது. போக்சோ பிரச்னைகள் 90% குடும்பத்தில் நெருக்கமானவர்கள், அறிந்தவர்களால் தான் ஏற்படுகிறது. இதை பற்றி பேச வேண்டும். புகார்கள் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க முடியும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவருக்கு எங்கு சென்றாலும் பாதுகாப்பு உள்ளது. தற்போது விஜய் அரசியலில் இருப்பதால் உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

The post ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெண்களை யூ-டியூபர்ஸ் அவதூறாக பேசுகின்றனர்: குஷ்பு ஆதங்கம் appeared first on Dinakaran.

Read Entire Article