
சென்னை,
சென்னை தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தலைமைச் செயலகத்தில் இன்று (21.05.2025) புதன்கிழமை காலை 10.30 மணியளவில்
(1) காவல் துறை சார்பில் பணிக்காலத்தில் காலமான காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தகவல் பதிவு உதவியாளர் / காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
(2) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழகம் ஆகியவற்றில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 36 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
(3) பால்வளத் துறை சார்பில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை மற்றும் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தட்டச்சர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 11 நபர்களுக்கும், இளநிலை செயற்பணியாளர் (அலுவலகம்) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 2 நபர்களுக்கும் மற்றும் பால் அளவையாளர் நிலை-III பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 5 நபர்களுக்கும், என மொத்தம் 18 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.
மேலும், பால்வளத் துறை சார்பில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை மற்றும் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்திட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தட்டச்சர், இளநிலை செயற்பணியாளர் மற்றும் பால் அளவையாளர் நிலை-III ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 18 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்.
(4) சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் சார்பில் பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 38 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 தோழி விடுதிக் கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.
மேலும், சென்னை தரமணி மற்றும் சேப்பாக்கம், மதுரை, கோயம்புத்தூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, ஈரோடு, காஞ்சிபுரம், கடலூர், தர்மபுரி, தேனி, சிவகங்கை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய இடங்களில் 176.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 14 தோழி விடுதிக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.