மும்பை: மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நியூ இந்தியா கூட்டுறவு வங்கிக்கு, 28 கிளைகள் உள்ளன. இதில் பெரும்பாலான கிளைகள் மும்பையில் அமைந்துள்ளது. சூரத் மற்றும் புனேவிலும் கிளைகள் உள்ளது. இந்த வங்கியில் அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தணிக்கை நடத்தியது. அப்போது பிரபாதேவி மற்றும் கோரேகாவில் உள்ள வங்கிக் கிளைகளில் இருந்து ரூ.112 கோடி பணம் காணாமல் போனது கண்டறியப்பட்டது. வங்கியில் நடந்த மோசடிக்கு பின்னணியில் வங்கியின் பொதுமேலாளரும் தலைமை கணக்காளருமான ஹிதேஷ் மேத்தா இருப்பது கண்டறியப்பட்டது. அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வங்கியில் பணத்தை எடுத்து மோசடி செய்தது ஆய்வில் தெரியவந்தது. போலீசார், ஹிதேஷ் மேத்தாவின் வீட்டில் நேற்று ரெய்டு நடத்தி கைது செய்தனர்.
The post ரூ.122 கோடி நிதி மோசடி நியூ இந்தியா கூட்டுறவு வங்கி மேலாளர் கைது appeared first on Dinakaran.