ரூ.100 கோடி வசூலை கடந்த டோவினோ தாமஸின் 'ஏ.ஆர்.எம் ' திரைப்படம்

2 months ago 19

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், 'மாரி, மின்னல் முரளி' உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டொவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

தற்போது இவர், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' (ஏ.ஆர்.எம்) படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குனர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார். டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் 3-டி தொழில்நுட்பத்தில் கடந்த 12-ந் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.எம் படத்தில், மூன்று வித்தியாசமான தோற்றங்களில் டோவினோ வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.பான் இந்திய திரைப்படமாக வெளியான இந்தப் படம் 13 நாள்களில் ரூ.87 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்தப் படம் இதுவரை உலகளவில் ரூ. 100 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாயகனாக டோவினோ நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படம் இதுதான். 2018 திரைப்படம் ரூ.175 கோடி வசூலித்தாலும் அதில் டோவினோவுடன் பல முன்னணி நடிகர்களும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Witness history in the making! Our film @armthemovie has crossed the monumental 100 Cr+ mark worldwide, and it's all thanks to YOU! ✨#ARM3D pic.twitter.com/m0nTM45Dve

— Magic Frames (@magicframes2011) September 29, 2024
Read Entire Article