ரூ.10 லட்சம் வரதட்சனை கேட்டு இளம்பெண் சித்திரவதை: செருப்பால் அடித்த கணவன் குடும்பத்தார் மீது போலீசில் புகார்

11 hours ago 5

வளசரவாக்கம்: சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி மதுரவாயல் பகுதியை சேர்ந்த நாகலட்சுமி(22) என்பவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தாயார் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். இதனால், அண்ணனின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்தேன். கடந்த 2024ம் ஆண்டு சென்னை நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(22) என்பவருடன் திருமணம் நடந்தது. வரதட்சணையாக 30 சவரன் போடவேண்டும் என்று கேட்டனர். அதற்கு எனது அண்ணன் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருவதாகவும் 30 சவரன் நகை போடமுடியாது என்று தெரிவித்தார். இதையடுத்து, 20 சவரன் நகையை வரதட்சணையாக வாங்கிக் கொண்டு திருமணம் நடந்தது.

அதன்பிறகு, என்னை சித்ரவதை செய்தனர். இதுபற்றி சொன்னால் குடும்பத்தினர் கஷ்டப்படுவார்கள் என்பதால் யாரிடமும் சொல்லவில்லை. தொடர்ந்து மாமனார், மாமியார், நாத்தனார் ஆகியோர் என்னை சித்ரவதை செய்தனர். மீதி 10 சவரன் கொண்டு வந்தால்தான் வீட்டில் நீ இருக்கலாம் என்று கூறி செருப்பால் அடித்து விரட்டி விட்டனர். தற்போது, நான் அண்ணன் வீட்டில் வசித்து வருகிறேன். எனது உடைகள், நகைகள் அனைத்தும் கணவர் வீட்டில் உள்ளது. எனவே, வரதட்சணை கொடுமைப்படுத்தி என்னை செருப்பால் அடித்து துன்புறுத்திய கணவன் குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, நாகலட்சுமி அளித்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நாகலட்சுமி, காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து புகார் தெரிவித்தார். இதையடுத்து கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமனார், மாமியார், நாத்தனார், கணவரின் அண்ணன் ஆகியோர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.

 

The post ரூ.10 லட்சம் வரதட்சனை கேட்டு இளம்பெண் சித்திரவதை: செருப்பால் அடித்த கணவன் குடும்பத்தார் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article