ரூ.10 லட்சத்தில் சமையலறை கட்டிடம்

1 week ago 4

ஆலங்குளம்,மே 6: ஆலங்குளம் அருகே கடங்கனேரி சமுதாய நலக்கூடத்தில் புதிய சமையலறை கட்டிடம் கட்டுவதற்காக தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ, ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்திருந்தார். இதையடுத்து நேற்று நடந்த விழாவில் அடிக்கல்நாட்டிய அவர், கட்டுமானப் பணியைத் துவக்கிவைத்தார். பஞ். தலைவர் அமுதா தேன்ராஜ் தலைமையில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் தேன்ராஜ், ஊர் நாட்டாண்மை தங்கராஜ், செல்வம், சுப்பிரமணியன், செல்வராஜ், கெங்குதுரை முன்னிலையில் நடந்த இந்நிகழ்வில் கணேசன், கண்ணன், அருண்குமார், சதன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post ரூ.10 லட்சத்தில் சமையலறை கட்டிடம் appeared first on Dinakaran.

Read Entire Article