ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூன்றரை ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் கோரிக்கை

2 months ago 11
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நாட்டேரி கிராமத்தில் 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கட்டி முடித்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்டோரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லையென்றும், குடிநீருக்காக குடங்களுடன் வேறு இடங்களுக்குச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Read Entire Article