“ரூ.10,000 கோடி கொடுத்தாலும் கூட தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்” - முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்

7 hours ago 2

கடலூர்: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம். 2,000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமூகம் செல்லக் கூடிய பாவத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கடலூரில் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் இன்று (பிப்.22) பெற்றோர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியது: “தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அந்தத் திட்டத்தில் கையெழுத்துப் போட்டால்தான், 2,000 கோடி ரூபாய் கிடைக்கும். 10,000 கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும், நாங்கள் கையெழுத்துப் போடமாட்டோம்.

Read Entire Article