இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 67 படகுகள் ஏலம்: மீனவ குடும்பங்கள் அதிர்ச்சி

8 hours ago 2

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் 67 படகுகளை பொது ஏலத்தில் விற்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. பாக்ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை கைது செய்து, மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகளை பறிமுதல் செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இலங்கை அரசு கடந்த 2024ம் ஆண்டு வரை பறிமுதல் செய்யப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட தமிழக படகுகளை ஏலத்தில் விற்க முடிவு செய்துள்ளது.

அதன்படி யாழ்ப்பாணத்தில் உள்ள 57 படகுகளும், கிளிநொச்சி மற்றும் மன்னார் துறைமுகங்களில் உள்ள 10 படகுகள் என மொத்தம் 67 படகுகளை திணைக்களம் மீன்வளத்துறை பட்டியல் தயார் செய்து மாவட்ட அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், புதுச்சேரி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த படகுகள் ஏலத்தில் விற்கப்பட உள்ளது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 67 படகுகள் ஏலம்: மீனவ குடும்பங்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article