ரிலீசுக்கு தயாரான 'எமகாதகி' பட நடிகையின் அடுத்த படம்

5 hours ago 2

சென்னை,

'உமா மஹேஷ்வர உக்ரா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமா துறையில் அறிமுகமானவர் ரூபா கொடுவாயுர். அப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து தற்பொழுது இவர் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அதன்படி, பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் கடந்த 7-ந் தேதி வெளியான 'எமகாதகி' படத்தில் ரூபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில் நடித்த ரூபா கொடுவாயூருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதற்கிடையில், இவரது நடிப்பில் கடந்த ஆண்டே வெளியாக இருந்த படம் 'சாரங்கபாணி ஜாதகம்'. பிரியதர்ஷி புலிகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தை மோகனகிருஷ்ணா இந்திரகாந்தி இயக்கி இருக்கிறார்.

சில காரணங்களால் தள்ளிப்போன இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அதன்படி, இப்படம் அடுத்த மாதம் 18-ம் தேதி வெளியாகிறது.

Read Entire Article