ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர்

2 hours ago 4

ரிசர்வ் வங்கியின் சிவில் மற்றும் எலக்டிரிக்கல் துறைகளில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: ஜூனியர் இன்ஜினியர்
i) சிவில் துறை: 7 இடங்கள் (பொது-3, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1) இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் குறைந்த பட்சம் 65% மதிப்பெண்களுடன் (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 55% மதிப்பெண்கள்) மூன்றாண்டு டிப்ளமோ அல்லது 55% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி (எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு 45%மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும்.
ii) எலக்டிரிக்கல் துறை: 4 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-2). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: எலக்டிரிக்கல், எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடத்தில் குறைந்தபட்சம் 65% மதிப்பெண்களுடன் மூன்றாண்டு டிப்ளமோ (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 55% மதிப்பெண்கள்) அல்லது எலக்டிரிக்கல் அல்லது எலக்டிரிக்கல் மற்றும் எலக்டிரானிக்ஸ் கம்யூனிகேசன் பாடத்தில் 55% மதிப்பெண்களுடன் பி.இ., (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு 45% மதிப்பெண்கள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 20,700-55,700.
வயது: 1.12.2024 அன்று 20 முதல் 30க்குள். அதாவது 02.12.1994க்கு முன்னதாகவோ, 1.12.2004க்கு (இரு தேதிகள் உள்பட) பின்னரோ பிறந்திருக்கக் கூடாது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ. 450/-. எஸ்சி.,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, வட்டார மொழி திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும்.
www.rbi.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2025

The post ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர் appeared first on Dinakaran.

Read Entire Article