ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்பு

1 month ago 5

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நேற்று பொறுப்பேற்று கொண்டார். கடந்த 2018 முதல் ஆறு ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து வந்த சக்திகாந்த தாஸ் கரோனா காலம் போன்ற நெருக்கடியான சூழலில் இந்தியப் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் முக்கியப் பங்காற்றி இருந்தார். அவரது பதவிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் போது ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் ஜெ.சுவாமிநாதன்,ராஜேஸ்வர் ராவ், டி.ரபி சங்கர் உடனிருந்தனர். ராஜஸ்தான் பிரிவை சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான இவர் கான்பூர், ஐஐடியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.பொருளாதார மற்றும் நிதி விஷயங்களில் விரிவான அனுபவம் கொண்ட மல்கோத்ரா மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார். சஞ்சய் மல்கோத்ரா பணவீக்க இலக்குகளை பராமரித்தல், பொருளாதார வளர்ச்சி மேம்பாடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பதவியேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article