ராவுத்தன்வயல் ஊராட்சியில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும்

2 months ago 7

தஞ்சாவூர், நவ. 27: ராவுத்தன்வயல் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்று தஞ்சை கலெக்டரிடம், விவசாயிகள் மனு கொடுத்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இத ற்கு கலெக்டர் பிரியங்காபங்கஜம் தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், விவசாயிகள் தங்களது மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். அப்போது தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் தலை மையில் விவசாயிகள், பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ராவுத்தன்வயல் அப்பகுதியில் முக்கியமான ஊராட்சியாகும். இந்த ஊராட்சியில் உள்ள சம்பைபட்டினம் அண்ணா நகர் பகுதியில் சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக உள்ளது.

தற்போது மழை பெய்து வருவதால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் மாணவ -மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்க முடியாமலும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். விவரித்து பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பைபட்டினம் அண்ணா நகர் பகுதியில் போர்கால அடிப்படையில் பழுதடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ராவுத்தன்வயல் ஊராட்சியில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article