தண்டையார்பேட்டை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதை ஒட்டி ராயபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பருவ மழையின்போது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வது தொடர்பாக, அவசர ஆலோசனை கூட்டம், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஐட்ரீம் மூர்த்தி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆர்.டி.சேகர் எம்எல்ஏ, ராயபுரம் பகுதி செயலாளர்கள் வ.பெ.சுரேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள், ராயபுரம் மண்டல அதிகாரி பரிதாபாலு, பொறியாளர்கள் சொக்கலிங்கம், லோகேஸ்வரன், குடிநீர் வாரியம், வருவாய் துறை, மின்வாரியம், சுகாதாரத்துறை, மாநகராட்சி, காவல்துறை, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சமீபத்தில் பெய்த மழையின் போது தூய்மைப்பணியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் வாரிய ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவு செய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதற்கு ஏற்ப, தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்காதவாறு மின் மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் நடத்துவது, கொசு மருந்து அடிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம் தேர்வு செய்வது, அவர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுப்பது, அத்தியாவசிய தேவைகளான பால், பிரட், பெட்ஷீட் ஆகியவை வழங்குவது, சேதமடைந்த சாலைகளை சீரமைப்பது, குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் பருவமழை பெய்தாலும் அதற்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
The post ராயபுரம் தொகுதியில் மழையை எதிர்கொள்வது எப்படி? அதிகாரிகள் ஆலோசனை appeared first on Dinakaran.