ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை

3 months ago 20

 

ராஜபாளையம், அக்.4: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியின் எரிசக்தி பாதுகாப்பு தரக்குழுவினரும், எரிசக்தி சுவராஜ் அறக்கட்டளையும் இணைந்து, மகாத்மா காந்தியின் பிறந்தநாள் மற்றும் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு சோலார் அம்பாசடர் பயிற்சி பட்டறை வகுப்பினை ஏற்பாடு செய்தன. இப்பயிற்சி வகுப்பின் முக்கிய நோக்கமானது, சோலார் தொழில்நுட்பத்தில் நேரடி அனுபவத்தை வழங்கி, காலநிலை மாற்றத்தை தடுக்க சூரிய ஆற்றலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதாகும்.

மேலும், இப்பயிற்சி வகுப்புகளில், சூரிய ஆற்றல் தொழில்நுட்பங்களை ஆராய்ந்து, தொழில்நுட்ப கூறுகளை பரிசோதித்து, தாங்களே சூரிய அறிவு கலைப்புக் கருவியை ஒருங்கிணைக்க வாய்ப்பு பெற்றார்கள். குறிப்பாக, தாங்கள் தயார்செய்த சூரிய அறிவுக் கருவியை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று சூரிய விளக்குகளை அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம், பரிசாக வழங்கலாம் அல்லது சமூகத்தில் தேவையுள்ள ஒருவருக்கு கொடுக்கலாம். சோலார் அம்பாசடர் வேலைப்பழகை 2024 நாடு முழுவதும் 1 லட்சம் பங்கேற்பாளர்களை இலக்காகக் கொண்டு நடைபெறுகிறது. ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 58 மாணவ, மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

The post ராம்கோ தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு பயிற்சி பட்டறை appeared first on Dinakaran.

Read Entire Article