ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக தனது ரூ.150 கோடி சொத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு; நடிகர் பிரபு

19 hours ago 1

சென்னை: மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.

பிரபு தரப்பு: சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை

நீதிபதி: ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?

பிரபு தரப்பு: நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது” என தெரிவித்துள்ள நிலையில் விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The post ராம்குமார் பெற்ற ரூ.3 கோடி கடனுக்காக தனது ரூ.150 கோடி சொத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு; நடிகர் பிரபு appeared first on Dinakaran.

Read Entire Article