ராம் சரண் - ஜான்வி கபூர் படத்தின் ரிலீஸ் தேதி இதுவா?

4 hours ago 1

சென்னை,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தை தொடர்ந்து, தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

'உப்பெனா' பட இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வருகிற 27-ம் தேதி ராம் சரண் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அன்று இப்படக்குழு கிளிம்ப்ஸ் வோடியோ வெளியிட உள்ளதாக தெரிகிறது. அதில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, இப்படத்தை அடுத்த ஆண்டு மார்ச் 26-ம் தேதி ராம் சரண் பிறந்த்நாளுக்கு இ நாள் முன்னதாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Read Entire Article